தொப்பை குறைய என்ன செய்வது | Thoppai kuraiya tips in Tamil

Share:

தொப்பை குறைய என்ன செய்வது | Thoppai kuraiya tips in Tamil

வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் எதாவது ஒன்றை தொடர்ந்து குடித்து வர உடல் எடை குறையும்.

பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

இரவில் கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட உடல் எடை குறையும்.

ஊற வைத்த அவலை சாப்பிட உடல் எடை குறையும்.

கருணைக் கிழங்கை மதிய உணவில் சமைத்து சாப்பிட உடல் எடை குறையும்.

மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி குடித்து வர தொப்பை (Thoppai kuraiya) குறையும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை பொடியாக்கி வெறும் வயிற்றில் குடித்துவர உடல் எடை குறையும்.

ஓமத்தை கறுக வறுத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட தொப்பை Thoppai kuraiya குறையும்.

கல்யாண முருங்கை பொடியை தினமும் காலையில் சாப்பிட தொப்பை Thoppai kuraiya குறையும்.

வாழைத்தண்டு பயன்கள் | Thoppai kuraiya tips in Tamil

வாழைத்தண்டு அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து கொண்டவை. இதில் சர்க்கரைச் சத்தும் உள்ளது. கொழுப்பைக் குறைக்கும்.

வயிற்றுப் பூண்களைக் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும். உடல் பருமானைக் குறைக்கும்.

வாழைத்தண்டு அதிக குளிர்ச்சி கொண்டது என்பதால் அதை உண்ணும் நாட்களில் தயிர், மோரை தவிர்க்கவும்.

வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வர உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

பெண்களின் மாதவிடாய் கோளாறு மற்றும் ரத்த அழுத்தத்துக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

சிறுநீரகத்தில் தோன்றும் கற்களைக் கரைக்கும். அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது.

பப்பாளிப் பழத்தின் மருத்துவப் பயன்கள் | Thoppai kuraiya tips in Tamil

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும் எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.

தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூலாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சோற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில பூச வலி, வீக்கம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் சாதத்தில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

மேலே உள்ள விதிமுறைகளை கடைப்பிடித்தால் தொப்பை குறைய (Thoppai kuraiya) ஆரம்பிக்கும்

No comments